/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெற்றோர் பிரியும் முடிவால் விரக்தி இரு மகள்கள் தற்கொலை முயற்சி
/
பெற்றோர் பிரியும் முடிவால் விரக்தி இரு மகள்கள் தற்கொலை முயற்சி
பெற்றோர் பிரியும் முடிவால் விரக்தி இரு மகள்கள் தற்கொலை முயற்சி
பெற்றோர் பிரியும் முடிவால் விரக்தி இரு மகள்கள் தற்கொலை முயற்சி
ADDED : ஏப் 01, 2025 01:13 AM
மெரினா, மெரினா காவல் நிலைய தலைமை காவலர் குமரேசன், காவலர்கள் சங்கர்குமார், முருகன் ஆகியோர், நேற்று முன்தினம் இரவு கடற்கரை பகுதியில், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று அமைக்கப்பட்ட பாதை அருகே, இரண்டு பெண்கள் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றதை பார்த்து உள்ளனர். உடனே, அவர்களை மீட்டு போலீசார் விசாரித்தனர்.
இதில், தேனாம்பேட்டை வெங்கடரத்தினம் தெருவைச் சேர்ந்த தீபிகா, 23, அவரது சகோதரி யோகேஸ்வரி, 20 என்பது தெரியவந்தது.
தீபிகா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்; யோகேஸ்வரி எத்திராஜ் கல்லுாரியில், 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தாய், தந்தை இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்து உள்ளனர். இதனால் மனமுடைந்து, மகள்கள் இருவரும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
பின், அவரது பெற்றோரை அழைத்து, அவர்களுடன் செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். அவர்களுடன் செல்ல மகள்கள் மறுத்து விட்டனர்.
இதனால், உறவினரான மணிவண்ணன் என்பவரிடம், போலீசார் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கு முயன்ற இரு பெண்களை விரைந்து மீட்ட, ரோந்து பணி போலீசாரை, கமிஷனர் அருண் வெகுவாக பாராட்டினார்.