/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆதம்பாக்கத்தில் இரண்டு நாள் ஆதார் முகாம்
/
ஆதம்பாக்கத்தில் இரண்டு நாள் ஆதார் முகாம்
ADDED : மே 30, 2025 12:25 AM
ஆதம்பாக்கம் ;
அஞ்சல் துறையும், ஆலந்துார் மண்டலத்தின், 163வது வார்டு தி.மு.க.,வும் இணைந்து, இரண்டு நாள் சிறப்பு ஆதார் முகாமை, ஆதம்பாக்கம், கருணிகர் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியில், இன்று துவங்குகிறது.
இதில், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் புதியதாக ஆதார் எடுக்க, பெற்றோரின் ஆதார் கார்டு அவசியம். புதிய கார்டுகள் இலவசமாக எடுக்கப்படுகின்றன.
பெயர் மாற்றத்திற்கு பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் கொண்டு வர வேண்டும்.
பிறந்த தேதி மாற்றத்திற்கு பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ், கல்விச் சான்றிதழ் கொண்டு வர வேண்டும். முகவரி மாற்றத்திற்காக ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், காஸ் ரசீது, வாக்காளர் அடையாள அட்டை , பாஸ்போர்ட் கொண்டு வர வேண்டும்.
ஆதார் திருத்தம் செய்ய, 50 ரூபாய், புகைப்படத்துடன் கூடிய ஆதார் திருத்தம் செய்ய, 100 ரூபாய், மொபைல் எண் சேர்க்க, 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தொடர்ந்து இரண்டு நாட்கள் நடக்கும் இச்சேவையில், ஆதம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிமக்கள் பயன் பெறலாம்.
***