/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செல்லப்பிராணிகள் சிகிச்சை இரண்டு நாள் பயிற்சி துவக்கம்
/
செல்லப்பிராணிகள் சிகிச்சை இரண்டு நாள் பயிற்சி துவக்கம்
செல்லப்பிராணிகள் சிகிச்சை இரண்டு நாள் பயிற்சி துவக்கம்
செல்லப்பிராணிகள் சிகிச்சை இரண்டு நாள் பயிற்சி துவக்கம்
ADDED : செப் 26, 2025 11:45 PM

சென்னை :சென்னை செல்லப் பிராணிகள் மருத்துவர் சங்கம் சார்பில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை மற்றும் ஆசிய சிறு விலங்கு கால்நடை சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து, 'கால்நடை அவசர கால மற்றும் தீவிர சிகிச்சை' குறித்த இரண்டு நாள் பயிற்சி, சென்னையில் நேற்று துவங்கியது.
சென்னை செல்லப் பிராணிகள் மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் பரணிதரன் வரவேற்றார். 50க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, கால்நடை அவசர சிகிச்சை நிபுணர் டெர்ரி கிங் பேசியதாவது:
நாய் மற்றும் பூனை, சாலை விபத்தில் சிக்கும்போது, அவற்றுக்கு அவசர கால சிகிச்சை வழங்க வேண்டும். அவ்வாறு விபத்தில் சிக்கிய நாய், பூனைக்கு சுவாசம், ரத்த ஓட்டம் சீராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தற்போது மக்கள் மத்தியில், வெளிநாட்டு நாய் வளர்க்கும் மோகம் அதிகரித்துள்ளது. இதில் சில சவால்கள் உள்ளன. உள்நாட்டு நாய்களுக்கு வெப்ப நிலையை சமாளித்து, தற்காத்துக் கொள்ள தெரியும். ஆனால், வெளிநாட்டு இன நாய்களுக்கு, வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளத் தெரியாததால், சுவாசப் பிரச்னை ஏற்படும். இவ்வாறு பேசினார்.
சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக்கல்லுாரியில், இன்று காலை 8:30 மணிக்கு, நாய், பூனை உடல்களை வைத்து, அவசர கால சிகிச்சை முறைபயிற்சி வழங்கப்படவுள்ளது.