/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவு நீர் உந்து நிலையத்தில் ஊழியர்கள் இருவருக்கு வெட்டு
/
கழிவு நீர் உந்து நிலையத்தில் ஊழியர்கள் இருவருக்கு வெட்டு
கழிவு நீர் உந்து நிலையத்தில் ஊழியர்கள் இருவருக்கு வெட்டு
கழிவு நீர் உந்து நிலையத்தில் ஊழியர்கள் இருவருக்கு வெட்டு
ADDED : ஜூலை 26, 2025 12:13 AM

கொடுங்கையூர், : கழிவு நீர் உந்து நிலையத்தில், ஊழியர்கள் இருவரை வெட்டிய சிறுவன் உட்பட மூவர் கைதாகினர்.
கொடுங்கையூர், ஜம்புலி தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாஷா, 41, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மலர்மன்னன், 32. இருவரும், கொடுங்கையூர், ஆர்.வி.நகர் பூங்காவனம் நகர் கழிவு நீர் உந்து நிலைய தற்காலிக ஊழியர்கள்.
இரவு பணி முடிந்து, நேற்று அதிகாலை துாங்கி கொண்டிருந்தபோது, மூன்று பேர் வந்துள்ளனர். அவர்களிடம் 'யாரை கேட்டு உள்ளே வந்தீர்கள்' என உசேன் பாஷா கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த மூவரும், உசேன் பாஷா மற்றும் மலர்மன்னனை, கத்தியால் வெட்டி தப்பினர்.
படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். கொடுங்கையூர் போலீசாரின் விசாரணையில், பொன்னியம்மன்மேடு, குமரன் நகரைச் சேர்ந்த ரிதீஷ், 21, டென்னிஷ், 20, மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், மதுபோதையில் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.