தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வாலிபரை தாக்கி பணப்பறிப்பு ரவுடிகள் இருவர் பிடிபட்டனர்

 வாலிபரை தாக்கி பணப்பறிப்பு ரவுடிகள் இருவர் பிடிபட்டனர்

 வாலிபரை தாக்கி பணப்பறிப்பு ரவுடிகள் இருவர் பிடிபட்டனர்


ADDED : ஜன 28, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 05:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுவண்ணாரப்பேட்டை: கத்தியால் வாலிபரை தாக்கி, வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

புதுவண்ணாரப்பேட்டை, அம்மணி அம்மன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ், 28. இவர், கடந்த 25ம் தேதி இரவு மதுபாட்டில் வாங்கி வீட்டிற்கு செல்ல, புதுவண்ணாரப்பேட்டை, வடக்கு மாடவீதியில் நடந்து சென்றார்.

அங்கு வந்த, தெரிந்த நபரான தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மோகன், 23, என்பவர், விக்னேஷை வழிமறித்து 'மது அருந்தலாம் வா' என வலுக்கட்டாயமாக இழுத்துள்ளார்.

அப்போது, விக்னேஷ் கையில் வைத்திருந்த மதுபாட்டில், கீழே விழுந்து உடைந்துள்ளது. உடனே விக்னேஷ், மோகனிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் விக்னேஷ் வீட்டின் அருகே நின்றபோது, அங்கு வந்த மோகன் மற்றும் அவரது கூட்டாளியான புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது தவுபிக், 25. ஆகியோர், விக்னேஷை கத்தியால் தாக்கி, அவரிடம் இருந்த 370 ரூபாயை பறித்து தப்பினர்.

காயமடைந்த விக்னேஷ், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து விசாரித்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், மோகன் மற்றும் முகமது தவுபிக்கை நேற்று கைது செய்தனர்; மோகன் மீது ஏற்கனவே 17 வழக்குகளும், முகமது தவுபிக் மீது 10 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வழிப்பறி திருடன் கைது

சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் 'எலி' கார்த்திக், 31; ரவுடி. இவர் மீது, 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 2024ல், சூளைமேடு பகுதியில் நடந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக, எலி கார்த்திக் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஜாமினில் வெளிவந்த பின், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், சூளைமேடு பகுதியில் பதுங்கி இருந்த இவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us