தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கோவில்களில் திருட்டு இருவர் பிடிபட்டனர்

கோவில்களில் திருட்டு இருவர் பிடிபட்டனர்

கோவில்களில் திருட்டு இருவர் பிடிபட்டனர்


UPDATED : நவ 13, 2026 10:57 PM

ADDED : நவ 13, 2026 10:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 10:57 PM ADDED : நவ 13, 2026 10:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அம்பத்துார்: அம்பத்துாரில் கோவில்களில் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அம்பத்துார் தொழிற்பேட்டை, முதலாவது பிரதான சாலையில், சிறு தொழிற்சாலைகள் வளாகத்தில் உள்ள ஐஸ்வர்ய கணபதி கோவிலின் இரும்பு கதவை உடைத்து, மர்மநபர்கள் திருட்டில் ஈடுபட்டனர்.

அதேபோல், கடந்த 1ம் தேதி வாவின் சந்திப்பில் உள்ள, நாகவள்ளியம்மன் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, நான்கு கிராம் தாலி செயின் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் திருடுபோனது.

இரண்டு சம்பவங்கள் குறித்தும், அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் விசாரித்தனர். இதில், திருநெல்வேலியைச் சேர்ந்த சிவலிங்கம், 37 மற்றும் பீஹாரைச் சேர்ந்த சந்தோஷ் குமார், 42, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர்கள் மூன்று கோவில்களில் திருடிய 23.15 லட்சம் ரூபாய் மதிப்புடைய 11.874 கிலோ வெள்ளி பொருட்கள், 6.20 லட்சம் ரூபாய் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவில் உண்டியலை உடைத்தவர் சிக்கினார்

துரைப்பாக்கம்: கோவில் உண்டியல் கொள்ளை முயற்சி ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம், பிள்ளையார் கோவில் தெருவில் ஸ்ரீ சுந்தர விநாயகர் கோயில் உள்ளது. நேற்று அதிகாலை அதிகாலை கோவில் உண்டியல் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டது.

பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் மாடியில் சென்று பார்த்தபோது, இருவர் உண்டியலை உடைத்து கொண்டிருந்தனர். இதுகுறித்து அவர் கோவில் நிர்வாகி டிக்காராமிற்கு மொபைல் போன் வாயிலாக தகவல் தெரிவித்தார்.

பின்னர் அவர் அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிந்ததின் வாயிலாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோயிலை சுற்றி வளைத்து கோயிலுக்குள் சென்று உண்டியலை உடைத்த ஒருவரை பிடித்தனர்.

மற்றொருவர் தப்பினார். பிடிபட்ட நபர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்றும் இப்பகுதியில் வந்து தங்கி கட்டட வேலை செய்தபடி உண்டியல் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us