ADDED : டிச 27, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தாமூர்: செங்கல்பட்டு, லத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் 30. இவர், தன் நண்பரான மதுராந்தகத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன், நேற்று இரவு 7:00 மணியளவில், மாருதி பெலினோ காரில், பவுஞ்சூரில் இருந்து மதுராந்தகம் நோக்கிச் சென்றார்.
ஜமீன் எண்டத்துார் கிராமத்திலுள்ள தனியார் கல்லுாரி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் உள்ள இலுப்பை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
காரை ஓட்டி வந்த சந்தோஷ், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுராந்தகம் அரசு மருத்துவமனை, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து குறித்து, சித்தாமூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

