/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புழலில் 3 விபத்துகளில் இருவர் பலி; மூதாட்டி காயம்
/
புழலில் 3 விபத்துகளில் இருவர் பலி; மூதாட்டி காயம்
ADDED : செப் 11, 2025 04:34 AM

புழல்,
புழலில் மூன்று விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். மூதாட்டி ஒருவர் காயமடைந்தார்.
புழல் அருகே புத்தகரம், வி.எம்.கே., நகரைச் சேர்ந்தவர் ரங்கநாதன், 80. இவர், நேற்று மாலை பழம் வாங்க விநாயகபுரம் சந்திப்புக்கு சென்றார்.
சைக்கிளில் வீடு திரும்பும்போது, பின்னால் வந்த பைக் மோதியது. நிலைதடுமாறி கீழே விழுந்த ரங்கநாதன் மீது, தனியார் கல்லுாரி பேருந்து ஏறி இறங்கியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பேருந்து ஓட்டுநர் மணி, 33 என்பவரை கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
கந்தகோட்டம் ஊழியர் பலி l கவரப்பேட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 57; பிராட்வே கந்தகோட்டம் முருகன் கோவில் கணக்காளர். இவர், நேற்று முன்தினம் இரவு பைக்கில் வீடு திரும்பியபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.
l செங்குன்றம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகம்மாள், 60. இவர், நேற்று மாலை மாதவரம் ரவுண்டானா சந்திப்பில் ஜி.என்.டி., சாலையை கடக்க முயன்றார். அப்போது கன்டெய்னர் லாரி மோதியது.
இதில் அவரது இடது கணுக்கால் நசுங்கியது. கன்டெய்னர் லாரி ஓட்டுநரான செஞ்சியைச் சேர்ந்த மதியழகன், 54, என்பவரை, மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.