ADDED : ஜன 09, 2024 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, வேலுார் மாவட்டம், சேப்பாக்கத்தைச் சேர்ந்த அரவிந்த், 45, என்பவர், கடந்தாண்டு ஆவடி மத்திய குற்றப் பிரிவில் ஒரு புகார் அளித்தார்.
அதில், ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர், மூன்றாவது தெருவில், எனக்கு சொந்தமான 3,600 சதுரடி நிலம் இருந்தது.
திருமுல்லைவாயிலைச் சேர்ந்த தேவராஜ், 55, மற்றும் அம்பத்துாரைச் சேர்ந்த ராஜா, 33, ஆகிய இருவரும், இந்த நிலத்திற்கு போலி ஆவணங்கள் தயார் செய்து, அங்கு வீடு கட்டி நிலத்தை அபகரித்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இது குறித்து விசாரித்த மத்திய குற்றப் பிரிவு போலீசார், மேற்கண்ட இருவரையும் கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று புழல் சிறையில் அடைத்தனர்.