/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டின் பூட்டை உடைத்து திருடிய இருவர் சிக்கினர்
/
வீட்டின் பூட்டை உடைத்து திருடிய இருவர் சிக்கினர்
ADDED : மே 13, 2025 12:44 AM

வடபழனி, :வடபழனி டாக்டர் ராகவன் காலனியைச் சேர்ந்தவர் போஜராஜ், 43. மும்பையில் தங்கி, அங்குள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவரது தந்தை பிரேமானந்தனுக்கு, இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், சோழிங்கநல்லுாரில் உள்ள மகள் வீட்டில் தங்கியுள்ளார். வாரத்திற்கு ஒருமுறை, வடபழனி வீட்டிற்கு வந்து சுத்தம் செய்து செல்வது வழக்கம்.
கடந்த 8ம் தேதி வீடு திறந்த நிலையில் இருப்பதாக, அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து, 450 கிராம் வெள்ளி விளக்கு, கொலுசுகள், தட்டுக்கள், கிண்ணம் உள்ளிட்ட பொருட்களை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து வடபழனி போலீசார் விசாரித்து, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த சந்தோஷ், 19, மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, திருடப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.