/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதியவரிடம் ரூ.1 லட்சம் பறித்த இருவர் சிக்கினர்
/
முதியவரிடம் ரூ.1 லட்சம் பறித்த இருவர் சிக்கினர்
ADDED : அக் 29, 2025 12:52 AM
பெரம்பூர்: முதியவரிடம், 1 லட்சம் ரூபாய் பறித்து தப்பிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர் அருகே அகரம், கோவிந்தராஜுலு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார், 67; ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர், நேற்று முன்தினம் காலை பெரியார் நகர் தபால் அலுவலகத்தில் இருந்து, ஒரு லட்சம் ரூபாய் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.
வீட்டின் முன் கதவு அருகே, பணத்தை மனைவியிடம் கொடுத்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்த இருவர் கண்ணிமைக்கும் நேரத்தில், சுகுமாரிடமிருந்த 1 லட்சம் ரூபாயை பறித்து பைக்கில் தப்பினர். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசாரின் விசாரணையில், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஜார்ஜ்புஷ், 33, மற்றும் ஸ்டீபன், 33, என்பது தெரியவந்தது.
திருமுல்லைவாயலில் பதுங்கி இருந்த இருவரையும், போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 81,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

