/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொலை முயற்சி வழக்கில் மேலும் இருவர் கைது
/
கொலை முயற்சி வழக்கில் மேலும் இருவர் கைது
ADDED : ஜன 22, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர், 21 மற்றும் ராகுல், 18, ஆகிய இருவரையும், கடந்த 10ம் தேதி இரவு 11:00 மணி அளவில், ரவுடி கும்பல் ஒன்று கத்தியால் குத்தியது.
புளியந்தோப்பு போலீசார் சஞ்சய் என்ற சுகுமார், 'ஸ்பீடு' சஞ்சய், நவீன் ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் முக்கியகுற்றவாளியான புளியந்தோப்பைச் சேர்ந்த 'வெள்ளை' சஞ்சய், 25, மற்றும் 'பாவாடை' சஞ்சய், 23, ஆகிய இருவரையும், நேற்று புளியந்தோப்பு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.