/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் மேலும் இருவர் கைது
/
போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் மேலும் இருவர் கைது
போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் மேலும் இருவர் கைது
போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் மேலும் இருவர் கைது
ADDED : அக் 08, 2025 02:52 AM
சென்னை, சூளைமேடு பகுதியில், போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில், மேலும் இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
சூளைமேடு போலீசார், கடந்த 5ம் தேதி, ஓ.ஜி., கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக, பிரதாப், 29, ஜனார்த்தனன், 27, பூர்ணசந்திரன், 21, அப்துல்வாசிம், 22, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, கஞ்சா பொட்டலங்கள், போதை மாத்திரைகள், 2.65 லட்சம் ரூபாய் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், நேற்று குரோம்பேட்டையைச் சேர்ந்த செந்தில்குமார், 41, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் பிரசாத், 25, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 1.5 கிலோ கஞ்சா, 23,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், குற்றவாளிகளை கைது செய்த, 29 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை, கமிஷனர் அருண் நேற்று நேரில் அழைத்து, வெகுமதி வழங்கி பாராட்டினார்.