தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/வழிப்பறி வழக்கில் மேலும் இருவர் கைது

வழிப்பறி வழக்கில் மேலும் இருவர் கைது

வழிப்பறி வழக்கில் மேலும் இருவர் கைது


ADDED : அக் 17, 2026 10:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2026 10:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓட்டேரி: ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 45, பாடியில் உள்ள டி.வி.எஸ்., கம்பெனியில் லோடுமேனாக வேலை செய்து வருகிறார். தன் சொந்த ஊருக்கு சென்று தன் குடும்பத்தினரை சந்தித்து விட்டு நேற்று முன்தினம் புளியந்தோப்பில் உள்ள தனது மாமா சுகுமார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நால்வர் வெங்கடேசனை சரமாரியாக தாக்கி 1,500 ரூபாய் பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து வெங்கடேசன் ஓட்டேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் ஏற்கனவே தினேஷ், சதீஷ் என இரண்டு பேரை கைது செய்த நிலையில், நேற்று ஓட்டேரி எஸ்.எஸ் புரம் பகுதியைச் சேர்ந்த விக்கி என்கின்ற விக்னேஷ் ,20 சதீஷ்குமார், 20 என இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

தேநீர் கடையில் தகராறு; ரவுடி கைது

ஓட்டேரி: ஓட்டேரி அருகே பட்டாளம் சி.எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன், 32. இவர், ஓட்டேரி ஸ்டாரான்ஸ் ரோடு பகுதியில் சொந்தமாக டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை இவரது டீக்கடைக்கு வந்த இருவர் குடிபோதையில் டீக்கடைக்கு வருபவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அதனை புருஷோத்தமன் தட்டி கேட்டபோது அவரை தாக்கியுள்ளனர் மேலும் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த சந்தானகுமார் என்பவரையும் தாக்கியுள்ளனர். இது குறித்து புருஷோத்தமன் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டேரி திக்காகுளம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி, 22 என்ற நபரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பிரேம் என்ற நபரை தேடி வருகின்றனர்.

சிகரெட் பிடித்த விவகாரம்: இருவர் கைது

புளியந்தோப்பு: புளியந்தோப்பு ஜெ.ஜெ நகர் பகுதியைச் சேர்ந்தவர் இசைவாணி, 38 அதே பகுதியை சேர்ந்தவர் நீலாவதி, 38. இந்த இரண்டு குடும்பத்தினருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நீலாவதிக்கு வேண்டப்பட்டவரான பரத் என்பவர் நேற்று காலை அவரது வீட்டு வாசலில் அமர்ந்து சிகரெட் பிடிக்கும்போது, அவ்வழியாக வந்த இசைவாணிக்கு தெரிந்த மாலிக் என்பவர், ‛ஏன் எங்கள் வீட்டு வாசலில் அமர்ந்து புகை பிடிக்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு வாய் தகராறு ஏற்பட்டு இரு தரப்பிலும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து இரு தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டது இசைவாணி கொடுத்த புகாரின் பேரில் புளியந்தோப்பு போலீசார் பரத்குமார் என்ற நபரையும், நீலாவதி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் முருகன் என்பவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us