sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஜாபர்கான்பேட்டையில் இரு தரப்பினர் மோதல்

/

ஜாபர்கான்பேட்டையில் இரு தரப்பினர் மோதல்

ஜாபர்கான்பேட்டையில் இரு தரப்பினர் மோதல்

ஜாபர்கான்பேட்டையில் இரு தரப்பினர் மோதல்


ADDED : மார் 23, 2026 11:17 PM

Google News

ADDED : மார் 23, 2026 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.ஜி.ஆர். நகர்: ஜாபர்கான்பேட்டையில் வீண்தகராறில் துவங்கிய பிரச்னை இருதரப்பு மோதலாக மாறியது. மேலும் சம்பவம் தொடர்பாக காவல் நிலையமும் முற்றுகையிடப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

ஜாபர்கான்பேட்டை, அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் கிரிஜா, 36. இவரது மகன் வெங்கடேஷ், 15. இவர், நண்பர்கள் வினோத், 21, ஜீவா, 23, பாலமுருகன், 20 ஆகியோருடன், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சேர்ந்த முரளி, 24, விக்னேஷ், 25, அரவிந்த்குமார், 21 ஆகியோர், 'எங்களை பார்த்து ஏன் சிரிக்கிறாய்' எனக் கேட்டு, வீண் தகராறில் ஈடுபட்டனர். இது, இரு தரப்பினர் இடையே கைகலப்பாக மாறியது.

மோதலை தடுக்க வந்த கிரிஜா என்பரின் தலையில், முரளி கட்டையால் தாக்கியதுடன் ஜீவாவின் இடது காதிலும் தாக்கியுள்ளார்.

காயமடைந்தவர்கள் கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த எம்.ஜி.ஆர்., நகர் போலீசார், இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சி.பி.ஐ.எம்., நிர்வாகி லெனின் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர், நேற்று மதியம் எம்.ஜி.ஆர்., நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us