/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை பொருள் வைத்திருந்த இருவர் கைது
/
போதை பொருள் வைத்திருந்த இருவர் கைது
ADDED : ஜூலை 02, 2025 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரும்பாக்கம், விற்பனைக்காக, 14 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் வைத்திருந்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.
அரும்பாக்கம் பகுதியில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற இருவரை பிடித்து விசாரித்தனர். முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால், அவர்களை சோதித்ததில் 14 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் இருந்தது தெரிந்தது.
விசாரணையில், அம்பத்துாரைச் சேர்ந்த அந்தோணி ரூபன், 29, தீபக்ராஜ், 25, என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து போதை பொருளை பறிமுதல் செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.