/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விநாயகர் சிலை வைக்க பந்தல் பணி மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு
/
விநாயகர் சிலை வைக்க பந்தல் பணி மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு
விநாயகர் சிலை வைக்க பந்தல் பணி மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு
விநாயகர் சிலை வைக்க பந்தல் பணி மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு
ADDED : ஆக 26, 2025 12:28 AM

சென்னை, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலை வைக்க பந்தல் அமைக்கும் பணியின்போது மின்சாரம் பாய்ந்து, வாலிபர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர்.
பூந்தமல்லி, பிராடிஸ் சாலையில் துாம கேது விநாயகர் கோவில் உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இக்கோவில் வளாகத்தின் முன், வண்ண வண்ண கொடிகள், மின் விளக்குகள், ஒலிபெருக்கி அமைக்கும் பணி முடிந்து, நேற்று, கோவில் முன் பந்தல் அமைக்கும் பணி நடந்தது.
இதில், பூந்தமல்லி, மேல்மா நகரைச் சேர்ந்த பரத், 28, மற்றும் அவரது நண்பர்கள் தென்னவன் உள்ளிட்ட நான்கு பேர் ஈடுபட்டனர். இதற்கான இரும்பு கம்பம் அமைக்கும்போது, மின் கம்பயில் உரசியுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து, நான்கு பேரும் துாக்கி வீசப்பட்டனர்.
பரத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்; இரண்டு பேர் லேசான காயமடைந்தனர். போலீசார் விரைந்து, காயமடைந்தவர்களை மீட்டு, பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின், பரத்தின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
மாதவரம்
செங்குன்றம் அடுத்த கண்ணம்பாளையம் மண்ணடி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரசாத், 22; பந்தல் போடும் வேலை பார்த்து வந்தார். நேற்று பகல் 12:00 மணி அளவில், மாதவரம் ராஜாஜி தெருவில், விநாயகர் சிலை வைப்பதற்காக பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, மின் கம்பியில் பந்தலுக்கான இரும்பு கம்பம் உரசியுள்ளது. இதில், மின்சாரம் பாய்ந்து பிரசாத் துாக்கி வீசப்பட்டார். அங்கிருந்தோர் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் போகும் வழியிலேயே பரிதாபமாக பலியானார். மாதவரம் போலீசார் உடலை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.