/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹோட்டல் ஊழியரிடம் வழிப்பறி சிறுவன் உட்பட இருவர் கைது
/
ஹோட்டல் ஊழியரிடம் வழிப்பறி சிறுவன் உட்பட இருவர் கைது
ஹோட்டல் ஊழியரிடம் வழிப்பறி சிறுவன் உட்பட இருவர் கைது
ஹோட்டல் ஊழியரிடம் வழிப்பறி சிறுவன் உட்பட இருவர் கைது
ADDED : ஏப் 19, 2025 11:51 PM
கொடுங்கையூர், கொடுங்கையூர், திருவள்ளுவர் சாலையை சேர்ந்தவர் அர்ஜுன், 20. நேபாளத்தைச் சேர்ந்த இவர், ஏழு நண்பர்களுடன் தங்கி, எம்.ஆர்., நகரில் உள்ள பாஸ்ட் புட் கடையில் மாஸ்டராக பணியாற்றுகிறார்.
நேற்று முன்தினம் இவர், வேலை முடிந்து தன் நண்பர்கள் கிருஷ்ணா, ஜீவன் ஆகியோருடன் வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், கத்தி வைத்திருப்பது போல் பாவனை காட்டி மிரட்டி, அர்ஜுனிடம் இருந்த 8,000 ரூபாயை பறித்து தப்பினர்.
இதுகுறித்த புகாரின்படி, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், வியாசர்பாடி, பெரியார் நகரை சேர்ந்த குமார், 19, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று இருவரையும் கைது செய்தனர்.