/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபருக்கு கத்திக்குத்து சிறுவன் உட்பட இருவர் கைது
/
வாலிபருக்கு கத்திக்குத்து சிறுவன் உட்பட இருவர் கைது
வாலிபருக்கு கத்திக்குத்து சிறுவன் உட்பட இருவர் கைது
வாலிபருக்கு கத்திக்குத்து சிறுவன் உட்பட இருவர் கைது
ADDED : மே 15, 2025 12:32 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர், ஏகவள்ளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ், 28. இவர், கடந்த 10ம் தேதி, திருவொற்றியூர், எண்ணுார் அதிவிரைவு சாலை வழியாக பைக்கில் சென்றார். அப்போது, அவ்வழியே வந்த கும்பல் லோகேைஷ வழிமறித்து, கத்தியால் கொடூரமாக தாக்கிவிட்டு பைக்கில் தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த லோகேஷை, அப்பகுதியினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட திருவொற்றியூர், சரஸ்வதி நகரைச் சேர்ந்த 'குள்ள' ஆனந்த், 20 மற்றும் 16 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கமல் என்பவரை லோகேஷ் தாக்கியுள்ளார். இந்த முன்விரோதம் காரணமாக, லோகேஷ் தாக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.