/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை மையத்தடுப்பில் மோதிய டூ - வீலர்கள் சிறுமி உட்பட 2 பேர் பலி; இருவர் படுகாயம்
/
சாலை மையத்தடுப்பில் மோதிய டூ - வீலர்கள் சிறுமி உட்பட 2 பேர் பலி; இருவர் படுகாயம்
சாலை மையத்தடுப்பில் மோதிய டூ - வீலர்கள் சிறுமி உட்பட 2 பேர் பலி; இருவர் படுகாயம்
சாலை மையத்தடுப்பில் மோதிய டூ - வீலர்கள் சிறுமி உட்பட 2 பேர் பலி; இருவர் படுகாயம்
ADDED : அக் 24, 2025 01:43 AM
பெரம்பூர்: பெரம்பூரில், சாலை மையத் தடுப்பில் ஸ்கூட்டர், பைக் மோதிய இரு வேறு விபத்துகளில், சிறுமி உட்பட இருவர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த இருவர், அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிகுமார் மகன் அசோக், 20; கல்லுாரி மாணவர். இவர், அயனாவரத்தில் உள்ள தன் தோழியான 16 வயது சிறுமியை அழைத்துக் கொண்டு, 'ஜூபிட்டர்' ஸ்கூட்டரில், பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் வழியாக, நேற்று முன்தினம் வேகமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் எதிர்பாராதவிதமாக மேம்பால சாலை மைய தடுப்பில் மோதியது. இதில், சிறுமியின் தலை தடுப்பில் மோதியதில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கால்களில் பலத்த காயமடைந்த அசோக், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மற்றொரு சம்பவம் பெரம்பூரைச் சேர்ந்தவர் இக்ரம் உசேன், 20. இவர், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள உறவினர் மகளான ஹஜீரா தபசும், 19 என்பவரை, வீட்டில் விடுவதற்காக, நேற்று முன்தினம் மாலை தன் 'டியூக்' பைக்கில் ஓட்டேரி, செங்கை சிவம் மேம்பாலம் வழியாக சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலை தடுப்பில் மோதியதில், சம்பவ இடத்திலேயே இக்ரம் உசேன் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னால் அமர்ந்திருந்த ஹஜீரா தபசும், பலத்த காயமடைந்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இரு விபத்துகள் குறித்தும், புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

