/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தண்ணீர் பிரச்னையை விசாரித்த போலீஸ்காரர் மீது தாக்குதல் வழிக்கறிஞர் உட்பட இருவர் கைது

ADDED : செப் 05, 2025 02:17 AM
நொளம்பூர், ;முகப்பேர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், தண்ணீர் பிரச்னையை விசாரிக்க சென்ற போலீஸ்காரரை தாக்கிய வழக்கறிஞர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
முகப்பேர் மேற்கு, ஏரி திட்டம் பகுதி, ஆறாவது பிரதான சாலையில், 'ஜெய்பாரத்' அடுக்குமாடி குடியிருப்பில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு வசிக்கும் உமாதேவி என்பவர், குடியிருப்பில் தண்ணீர் வரும் குழாயை அடைத்து, சிலர் தகராறில் ஈடுபடுவதாக, நேற்று முன்தினம் இரவு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து விசாரிக்க, நொளம்பூர் காவல் நிலைய போலீஸ்காரர் பாலாஜி சென்றார். அங்கிருந்த இருவர், தங்களை கடலோர காவல் படை அதிகாரி மற்றும் வழக்கறிஞர் எனக் கூறி, போலீஸ்காரர் பாலாஜியிடம் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி, போலீஸ்காரரின் முகத்தில் தாக்கி, விரட்டியுள்ளனர்.
பலத்த காயமடைந்த போலீஸ்காரர் பாலாஜி, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். புகாரின் படி, நொளம்பூர் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இந்நிலையில், போலீஸ்காரரை தாக்கி தலைமறைவான வழக்கறிஞர் வெங்கடேசன், 55, மற்றும் ஓய்வு பெற்ற கடலோர காவல் படை அதிகாரி செல்லப்பா, 58, ஆகியோர், முன்ஜாமின் பெற நேற்று எழும்பூர் நீதிமன்றம் அருகே சென்றபோது, அவர்களை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து, கைது செய்தனர்.