/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்லுாரி மாணவியை தாக்கிய ரவுடி உட்பட இருவர் கைது
/
கல்லுாரி மாணவியை தாக்கிய ரவுடி உட்பட இருவர் கைது
ADDED : டிச 09, 2024 03:48 AM

ஏழுகிணறு:சென்னை, ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் 18 வயது கல்லுாரி மாணவி. இவர் அங்கு பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.
கடந்த 6 ம் தேதி காலை பியூட்டி பார்லரில் இருந்த போது, பைக்கில் வந்த இருவர், பியூட்டி பார்லர் உள்ளே வந்து போனா, பேப்பர் கேட்டுள்ளனர்.
இங்கு பெண்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு எனக்கூறி, அவர்களை வெளியே போக சொன்ன மாணவியிடம் இரு நபர்களும் தகராறு செய்து அவதுாறாக பேசி, கையை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். பின் பைக்கில் தப்பி சென்றனர்.
இதுகுறித்து கல்லுாரி மாணவி கொடுத்த புகாரின்படி, ஏழுகிணறு போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முத்தையா முதலி தெருவை சேர்ந்த பரத்ராஜ், 20; மண்ணடி, செம்புதாஸ் தெருவை சேர்ந்த முகமது அப்பாஸ், 21 ஆகிய இருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பரத்ராஜ் மீது, எம்.கே.பி.நகர், நந்தம்பாக்கம், ஏழுகிணறு, முத்தியால்பேட்டை, பெரும்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களில், 2 கொலை முயற்சி, 5 வழிப்பறி உள்ளிட்ட 8 வழக்குகள் இருப்பது தெரிந்தது.