/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டூ - வீலர்கள் மோதியதில் தகராறு இருவருக்கு அடி உதை: 4 பேர் கைது
/
டூ - வீலர்கள் மோதியதில் தகராறு இருவருக்கு அடி உதை: 4 பேர் கைது
டூ - வீலர்கள் மோதியதில் தகராறு இருவருக்கு அடி உதை: 4 பேர் கைது
டூ - வீலர்கள் மோதியதில் தகராறு இருவருக்கு அடி உதை: 4 பேர் கைது
ADDED : நவ 09, 2025 03:51 AM
கே.கே.: கே.கே.நகர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில், இருதரப்பிற்கு ஏற்பட்ட தகராறில் இருவரை தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
நெசப்பாக்கம், கானு நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் ஹேமசந்திரன், 22. இவர், கடந்த 5ம் தேதி நண்பர் பிரவீன் என்பவருடன், கே.கே.நகர் ஆர்.கே.சண்மும் சாலையில் பைக்கில் சென்றார்.
அப்போது, பின்னால் பைக்கில் வந்த தினேஷ் என்பவர் ஹேமசந்திரனின் பைக் மீது மோதினார். இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து, தனுஷ் தன் நண்பர்கள் விஜய், கவிபேரரசு, பரத் ஆகியோரை சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். அனைவரும் சேர்ந்து கட்டயைால் ஹேமசந்திரன் மற்றும் பிரவீனை தாக்கினர். இதில், காயமடைந்த விஜய் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்த புகாரையடுத்து கே.கே.நகர் போலீசார், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த விஜய், 21, ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த தனுஷ், 21, கவிபேரரசு, 21, பரத், 20 ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.