ADDED : மார் 01, 2024 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பியம், பெரம்பூர், கருணாநிதி சாலையில், நேற்று அதிகாலை 2:00 மணியளவில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவின் கண்ணாடி மற்றும் கூரையை, மது போதையில் இருந்த சிலர் உடைப்பதாக, செம்பியம் பகுதி ரோந்து போலீசாருக்கு தகவல் வந்தது.
சம்பவ இடத்திற்கு போலீசார் சென்ற போது, சிலர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.வியாசர்பாடியைச் சேர்ந்த தீபக், 18, பிரவீன்குமார், 18, ஆகிய இருவர் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார், இதில் தொடர்புள்ள ரித்தீஷ் உள்ளிட்ட ஐவரை தேடி வருகின்றனர்.

