ADDED : நவ 03, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.நகர், கொருக்குப்பேட்டை, ஹரி நாராயணபுரம் 5வது தெருவைச் சேர்ந்தவர் சோனியா, 25. இவரது வீட்டில் இருந்த ஏழரை சவரன் நகைகள் திருட்டு போயின. ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்தனர்.
அதில், 17 வயது சிறுமி மற்றும் அவரது தாய் பழைய வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகரைச் சேர்ந்த கற்பகம், 39, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
விசாரணையில், சோனியா வீட்டில் வேலை செய்த 17 வயது சிறுமி, வீட்டின் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை திருடி, தன் தாய் கற்பகத்துடன் சேர்ந்து அடகு வைத்தும், விற்பனை செய்தும் பணம் பெற்றது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.