/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆன்லைனில் லாட்டரி விற்ற இருவர் கைது
/
ஆன்லைனில் லாட்டரி விற்ற இருவர் கைது
ADDED : பிப் 21, 2025 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லிவாக்கம், 'வில்லிவாக்கத்தில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, வில்லிவாக்கம், சிட்கோ நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்து சோதித்ததில், வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பது உறுதியானது.
லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சிட்கோ நகரைச் சேர்ந்த பழனிமுருகன், 45, திருமங்கலம், அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த பர்விஷ் அகமது, 52, ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 11,490 ரூபாய், ஒரு லேப்டாப், நான்கு மொபைல்களை பறிமுதல் செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.