ADDED : ஏப் 02, 2025 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல், பல்லாவரம் கண்ணபிரான் கோவில் தெருவை சேர்ந்தவர் ராணி போஸ், 60. போக்சோ வழக்கில், தாம்பரம் மகளிர் போலீசார், 2022ல் கைது செய்யப்பட்ட இவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த வாரம் ஸ்டான்லி மருத்துவமனையில், ராணிபோஸ் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
மற்றொருவர்
அண்ணா நகர், வசந்தம் காலனியை சேர்ந்தவர் தங்கப்பன், 69; மத்திய குற்றப்பிரிவு போலீசாரால், கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து, புழல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
***

