ADDED : மார் 02, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆதம்பாக்கம், சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் சீனிவாசன் என்ற ரவுடி கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில், கிழக்கு தாம்பரம், அந்தோணி பிள்ளை தெருவைச் சேர்ந்த ரவுடி ஜெய்குமார், 32, என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த ஜன., மாதம் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ஜெய்குமார் தலைமறைவானார். இந்நிலையில், ஆதம்பாக்கம் பகுதியில் கஞ்சாவுடன் பதுங்கி இருந்த ஜெய்குமார், அமைந்தகரை, கண்ணைய்யா தெருவைச் சேர்ந்த தமீம் ஜிலான், 25 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கைதான ஜெய்குமார் மீது மூன்று கொலை வழக்குகள் உட்பட 17 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

