/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரிய வகை இரு குரங்கு, ஏழு ஆமை சென்னை ஏர்போர்ட்டில் பறிமுதல்
/
அரிய வகை இரு குரங்கு, ஏழு ஆமை சென்னை ஏர்போர்ட்டில் பறிமுதல்
அரிய வகை இரு குரங்கு, ஏழு ஆமை சென்னை ஏர்போர்ட்டில் பறிமுதல்
அரிய வகை இரு குரங்கு, ஏழு ஆமை சென்னை ஏர்போர்ட்டில் பறிமுதல்
ADDED : ஜூன் 20, 2025 12:29 AM

சென்னை, பாங்காக்கில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்களை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாய்லாந்தில் இருந்து விமானத்தில், வன உயிரினங்கள் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவுக்கு, நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இரவு 11:55 மணிக்கு, 'தாய் ஏர்வேஸ்' விமானம், சென்னை வந்தது. அதில் வந்த பயணியரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர், சுற்றுலா வீசாவில் தாய்லாந்து சென்று திரும்பியது தெரிந்தது. அவரை தடுத்து நிறுத்தி, பரிசோதனை செய்தனர்.
அப்போது, அவரது உடைமையில் காற்றோட்டமுள்ள இரு சிறிய மெத்தைகளை வைத்து, அரிய வகை வன உயிரினங்கள் கடத்தியது தெரிந்தது.
அதில், உயிருடன் இரு குரங்குகள், அரிய வகை ஆமைகள் ஏழு இருந்தன. இவை அனைத்தும், மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகள் பட்டியலில் இருப்பவை என்பதும் தெரிந்தது. எனவே, அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தல் பயணியை கைது விசாரித்து வருகின்றனர்.