ADDED : ஏப் 17, 2025 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர், கொளத்துாரைச் சேர்ந்தவர் சைலேந்திரன், 18; சைக்கிளில் குல்பி ஐஸ் விற்பனை செய்து வருகிறார். கடந்த 13ம் தேதி நள்ளிரவு, கொடுங்கையூர், எருக்கஞ்சேரி 'அம்மா' உணவகம் அருகே, சைக்கிளில் குல்பி ஐஸ் விற்பனை செய்தபோது, பைக்கில் வந்த இருவர், இரும்பு ராடால் மிரட்டி, அவரிடம் இருந்து 2,000 ரூபாய் பறித்து சென்றனர்.
இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரித்தனர். இதில், எருக்கஞ்சேரியைச் சேர்ந்த தனுஷ், 25, கோகுல் ராமன், 22, ஆகியோர், வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.