ADDED : மே 04, 2025 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மேற்கு மாம்பலம், படவட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வமணி, 26. இவர், கடந்த 27ம் தேதி அதிகாலை மேற்கு மாம்பலம் ரெட்டி குப்பம் சாலை வழியாக நடந்து சென்றார்.
அப்போது ஆட்டோவில் வந்த இருவர், கத்திமுனையில் 3,000 ரூபாயை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து, குமரன் நகர் போலீசார் விசாரித்தனர்.
இதில், ெஷனாய் நகரைச் சேர்ந்த அனுஷ், 24, கணேஷ், 37, ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று இருவரையும் கைது செய்த போலீசார், 1,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.