ADDED : மார் 02, 2024 12:28 AM
அ நிறம் | அளவு
சென்னை, திருவல்லிக்கேணி, தசூதின்கான் தெருவில் உள்ள தங்கும் விடுதியில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
இதில், புதுப்பேட்டையைச் சேர்ந்த ஹசன் குத்துஸ், 76, பிட்யாதர் ஜெனா, 36, ஆகிய இருவரும் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார். அவர்களிடம் சிக்கியிருந்த இரண்டு பெண்களை மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
