ADDED : மே 20, 2026 03:35 AM
அரும்பாக்கம்: அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனியைச் சேர்ந்தவர் ஸ்ரீலேகா, 35.
இவர், அரும்பாக்கம், என்.எஸ்.கே., தெருவில் ஸ்டேஷ்னரி கடை நடத்தி வருகிறார். அவரது கடையின் பக்கத்தில், நடராஜன் என்பவர் கேன் குடிநீர் விற்பனை செய்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன், நடராஜனின் கடைக்கு வந்த சரண்ராஜ் என்பவர் வீண் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஸ்ரீலேகா இருவரையும் விலக்கி, சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை கடைக்கு வெளியே நடராஜன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சரண்ராஜ், வீண் தகராறு செய்ததுடன், மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார்.
தடுக்க சென்ற ஸ்ரீலேகாவிற்கும் கத்திக்குத்து விழுந்தது.
அங்கிருந்தோர் இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து விசாரித்த அரும்பாக்கம் போலீசார், சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ், 34 என்பவரை கைது செய்தனர்.
