/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஊர் நிர்வாக பொறுப்பாளர் தேர்வு இரு தரப்பு மோதல்: 3 பேர் கைது
/
ஊர் நிர்வாக பொறுப்பாளர் தேர்வு இரு தரப்பு மோதல்: 3 பேர் கைது
ஊர் நிர்வாக பொறுப்பாளர் தேர்வு இரு தரப்பு மோதல்: 3 பேர் கைது
ஊர் நிர்வாக பொறுப்பாளர் தேர்வு இரு தரப்பு மோதல்: 3 பேர் கைது
ADDED : ஏப் 10, 2025 12:36 AM
சென்னை, எண்ணுார், முகத்துவார குப்பம் பகுதியில், ஊர் நிர்வாக பொறுப்பில், உதயகுமார் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில், புதிய நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என, ஊரில் ஒரு தரப்பினர் கூறியுள்ளனர்.
இதனால், புதிய ஊர் நிர்வாகம் தேர்ந்தெடுப்பில், உதயகுமார் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமார் உள்ளிட்ட இரு தரப்பினரிடையே, 6ம் தேதி மோதல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, இரு தரப்பினரும் எண்ணுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, உதயகுமார் தரப்பினர் அளித்த புகாரில், அதே பகுதியைச் சேர்ந்த ரஜினி, 42, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
எதிர் தரப்பினரான ராம்குமார் அளித்த புகாரின்படி, கர்ணன், 54, அவரது மகன் பவநந்தன், 27, ஆகிய இருவரையும், நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்து, விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர்.