தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கன்டெய்னர் லாரி மோதி மாணவர்கள் இருவர் பலி

கன்டெய்னர் லாரி மோதி மாணவர்கள் இருவர் பலி

கன்டெய்னர் லாரி மோதி மாணவர்கள் இருவர் பலி


ADDED : ஜன 05, 2024 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2024 01:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பூந்தமல்லி, மதுரவாயல் அடுத்த நொளம்பூரைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர்.

இவரது மகன் மாதேஷ், 20; தண்டலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பொறியியல் இறுதியாண்டு படித்து வந்தார். இவர், நேற்று காலை 'யமஹா ஆர்ஒன் 5' இருசக்கர வாகனத்தில், முகப்பேர் மேற்கு, ஜெ.ஜெ., நகரைச் சேர்ந்த அவரது நண்பர் வைசால், 20, உடன் கல்லுாரி சென்று கொண்டிருந்தார்.பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, திருமழிசை கூட்டுச்சாலை அருகே சென்றபோது, சாலையோரத்தில் பழுதாகி நின்ற வேன் மீது மோதாமல் இருக்க, வலதுபுறம் திரும்பிய போது, இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.அப்போது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி ஒன்று இருவர் மீது ஏறி இறங்கியதில், மாதேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த வைசால், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், அவர்கள் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்துக்கு காரணமான வேன் மற்றும் கன்டெய்னர் ஓட்டுனர்களான பால்ராஜ், 58, ராமசாமி, 40, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us