/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'கிக் பாக்சிங்' உலக கோப்பை தமிழக வீரர்கள் இருவர் பங்கேற்பு
/
'கிக் பாக்சிங்' உலக கோப்பை தமிழக வீரர்கள் இருவர் பங்கேற்பு
'கிக் பாக்சிங்' உலக கோப்பை தமிழக வீரர்கள் இருவர் பங்கேற்பு
'கிக் பாக்சிங்' உலக கோப்பை தமிழக வீரர்கள் இருவர் பங்கேற்பு
ADDED : ஏப் 07, 2025 02:12 AM

சென்னை:தாய்லாந்து 'கிக் பாக்சிங்' சங்கம் சார்பில், முதலாவது கிக் பாக்சிங் உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி, இன்று துவங்கி, ஏப்., 12ம் தேதி வரை, ஆறு நாட்கள் நடக்கிறது.
தாய்லாந்தின், பாங்காக் நகரில் நடக்கும் இப்போட்டியில், இந்தியா, தாய்லாந்து, தென்கொரியா, கம்போடியா, பின்லாந்து, மலேஷியா, பிரான்ஸ், நார்வே, உக்ரைன் உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன.
இருபாலரிலும், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், மாஸ்டர் ஆகிய பிரிவுகளில், கிக் பாக்சிங் போட்டிகள் நடக்கின்றன.
இதில், இந்தியாவின் சார்பில் 22 வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களில் தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன், சீனியர் பிரிவில், 'பாய்ண்ட் பைட்டிங்' மற்றும் 'லைட் காண்டாக்ட்' ஆகிய போட்டிகளில் பங்கேற்கிறார்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய் ஸ்ரீனிவாசன், ஜூனியர் பிரிவில் 'லோ கிக்' போட்டியில் பங்கேற்கிறார்.
தமிழக வீரர்கள் இருவரும், இந்திய கிக் பாக்சிங் அணியின் தலைமை பயிற்சியாளர் சுரேஷ்பாபுவுடன் நேற்று, தாய்லாந்து புறப்பட்டு சென்றனர்.

