/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாடு மீது டூ - வீலர் மோதி வாலிபர் பலி
/
மாடு மீது டூ - வீலர் மோதி வாலிபர் பலி
ADDED : பிப் 04, 2024 02:18 AM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த, ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் குமார், 23. மாமல்லபுரம் சிற்பக்கூட சிற்பி.
நேற்று முன்தினம் இரவு இவரும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் முருகனும், மாமல்லபுரத்திலிருந்து ஒரகடத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
முருகன் வாகனத்தை ஓட்டினார். திருக்கழுக்குன்றம், ஒரகடம் சாலை சந்திப்பில் சென்றபோது, குறுக்கே வந்த மாட்டின் மீது மோதி, கீழே விழுந்து காயமடைந்தனர்.
திருக்கழுக்குன்றம் போலீசார் அவர்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று காலை குமார் உயிரிழந்தார். அவருக்கு ஓராண்டுக்கு முன் தான் திருமணமானது.