/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டூ - வீலரில் சென்றவர் சொகுசு கார் மோதி பலி
/
டூ - வீலரில் சென்றவர் சொகுசு கார் மோதி பலி
ADDED : பிப் 04, 2024 02:28 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, அய்யன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன், 44. அதே கிராமத்தைச் சேர்ந்த இவரது நண்பர் ரமேஷ், 43. இருவரும், நேற்று முன்தினம், 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில், அய்யங்கார்குளம் பகுதி நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்திசையில் அதிவேகமாக வந்த, 'பி.எம்.டபிள்யூ' சொகுசு கார், பாலுமுருகன் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
காயமடைந்த இருவரையும், அப்பகுதியினர் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, பாலமுருகன் இறந்து விட்டார். ரமேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து, காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.