/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டூ - வீலர்கள் மோதல் பெயின்டர், மாணவர் பலி
/
டூ - வீலர்கள் மோதல் பெயின்டர், மாணவர் பலி
ADDED : மார் 16, 2024 12:15 AM

செங்கல்பட்டு, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ், 21. செங்கல்பட்டில் தங்கி, சட்டக் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, நண்பர்கள் இருவருடன் 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கில், செங்கல்பட்டில் இருந்து மேலமையூர் நோக்கிச் சென்றார்.
அண்ணா நகர் பிரதான சாலையில் வேகமாக வந்தபோது, எதிரே டி.வி.ஸ்., - எக்ஸ்.எல்., சூப்பர் வாகனத்தில் வந்த திருமணி பகுதியைச் சேர்ந்த பெயின்டர் நந்தகோபால், 40, அவரது நண்பர் தணிகாசலம், 32, ஆகியோர் மீது, சதீஷின் பைக் நேருக்கு நேர் மோதியது.
இதில், நந்தகோபால் மற்றும் மாணவர் சதீஷ் இருவரும் துாக்கி வீசப்பட்டு, அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்ற மூவரும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
செங்கல்பட்டு நகர போலீசார், நந்தகோபால் மற்றும் சதீஷ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

