ADDED : ஆக 20, 2026 08:51 PM
அ நிறம் | அளவு
வடபழனி: பூந்தமல்லி நசரத்பேட்டை பேருந்து நிலையம் பகுதியில், போலீசார் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த இருவரை பிடித்து சோதனை செய்தபோது, அவர்கள் பையில் 3,000 டைடால் போதை மாத்திரைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் வடபழனி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர்கள் திருவேற்காட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்ற ஐ.எம்.சி., மணி, 26, மற்றும் புழலைச் சேர்ந்த மண்டா தினேஷ் என்ற ஜோசப், 29, என்பதும், மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். கைதான இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
