/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வழிப்பறியில் ஈடுபட்ட இரு வாலிபர்கள் கைது
/
வழிப்பறியில் ஈடுபட்ட இரு வாலிபர்கள் கைது
ADDED : ஜன 08, 2026 05:34 AM
படப்பை: படப்பையை அடுத்த வஞ்சுவாஞ்சேரியில், வாடகை வீட்டில் தங்கி, அங்குள்ள ஹோட்டலில் வேலை செய்து வருபவர் ரஞ்சித். ஜன., 5ம் தேதி, வீட்டின் எதிரே இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார்.
அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள், ரஞ்சித்தின் வாகனத்தை திருடினர். அப்போது, அவ்வழியாக சென்ற மகேந்திரன் என்பவரை வழிமறித்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
மகேந்திரன் பணம் இல்லை என கூறியும், அவரை மிரட்டி' ஜிபே' எனும் பணம் அனுப்பும் மொபைல் போன் செயலி மூலம், 5,000 ரூபாயை பறித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பினர்.
இது குறித்து, படப்பை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, பணம் பறிப்பில் ஈடுபட்ட, வாலாஜாபாத்தை சேர்ந்த மணிமாறன், 26, தனசேகர், 20, ஆகிய இருவரையும், நேற்று கைது செய்தனர்.

