/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.48 கோடியில் புதிய திட்டம் துவங்கி வைத்தார் உதயநிதி
/
ரூ.48 கோடியில் புதிய திட்டம் துவங்கி வைத்தார் உதயநிதி
ரூ.48 கோடியில் புதிய திட்டம் துவங்கி வைத்தார் உதயநிதி
ரூ.48 கோடியில் புதிய திட்டம் துவங்கி வைத்தார் உதயநிதி
ADDED : ஜன 01, 2026 05:32 AM

சென்னை: தமிழகத்தில், விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், 48.76 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு, துணை முதல்வர் உதயநிதி, நேற்று அடிக்கல் நாட்டினார்.
இதில், சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில், 8 கோடி ரூபாயில் ஓடுதளப் பாதை மறுசீரமைப்பு; செங்கல்பட்டு கீரப்பாக்கத்தில், 17.01 கோடி ரூபாயில், சர்வதேச தரத்திலான துப்பாக்கிச்சுடுதல் பயிற்சி அகாடமி;
சேலத்தில் 11.40 கோடி ரூபாயிலும், ராமநாதபுரத்தில் 12.35 கோடி ரூபாயிலும், புதிய செயற்கை இழை ஓடுதளப் பாதைகளுக்கான பணியை, உதயநிதி துவக்கி வைத்தார்.
மேலும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம், வீரர்களுக்கு ஊக்கத் தொகையாக, 15.63 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில், அமைச்சர்கள் அன்பரசன், ராஜகண்ணப்பன், சேகர்பாபு மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.