/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரிந்து கட்டிய உ.பி.,க்கள் கண்டுகொள்ளாத உதயநிதி
/
வரிந்து கட்டிய உ.பி.,க்கள் கண்டுகொள்ளாத உதயநிதி
ADDED : மார் 04, 2024 01:17 AM

செங்குன்றம்:விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில், லோக்சபா தேர்தல் எதிரொலியாக, அமைச்சர் உதயநிதியின் பார்வைக்காக, வரிந்து கட்டி வரவேற்ற எம்.பி., எம்.எல்.ஏ., க்களை, அவர் கண்டுகொள்ளாதது, ஏமாற்றத்தை அளித்தது.
சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லுாரில், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா, 1ம் தேதி நடந்தது. அதில் கலந்து கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, திருவள்ளூர் மாவட்டத்தின், 526 ஊராட்சிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.
இந்த விழாவில், திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மாதவரம், கும்மிடிபூண்டி, பொன்னேரி சட்டமன்ற தொகுதி தி.மு.க., காங்., எம்.எல்.ஏ.,க்கள், திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி., ஜெயகுமார் மற்றும் தி.மு.க., வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், பிரமுகர்கள் பலரும், ‛ஆப்சென்ட்' ஆகாமல், கலந்து கொண்டு, தங்கள் பலத்தை காட்டி, அமைச்சர் உதயநிதியின் பார்வையில் ஊடுருவ முயன்றனர். அதற்காக, மேடை ஏறிய விளையாட்டு வீரர்களுக்கு, ‛டஃப்' கொடுக்கும் வகையில், மேடையில் வரிந்து கட்டினர்.
முன்னதாக, சோழவரம் ஒன்றிய தி.மு.க., செயலர் கருணாகரன் சார்பில், காரில் பயணித்த உதயநிதிக்கு, 1 கிலோ மீட்டர் துாரத்திற்கு, மலர் துாவி வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனால், தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதற்கு காரணம், லோக்சபா தேர்தலில் தங்கள் ஆதரவாளர்களுக்கு , ‛சீட்' வாங்கி விட வேண்டும் என்ற ஆசைதான். அதே போல், தற்போது பதவியில் உள்ள காங்கிரஸ் எம்.பி., ஜெயகுமாரும் முயன்றார். ஆனால், நடிகர் வடிவேலுவின் காமெடியாக, உங்களுக்கு இன்னும் பயிற்சி தேவை என்பது போல், அமைச்சர் உதயநிதி, அவர்களை கண்டுகொள்ளாதால், நொந்து போயினர்.

