ADDED : மார் 02, 2024 12:05 AM
அ நிறம் | அளவு
சென்னை, சென்னை துறைமுகத்தில், சரக்கு கப்பலில் இருந்து மீட்கப்பட்ட உடும்பு, வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை துறைமுகத்திற்கு, பல்வேறு நாடுகளில் இருந்து சரக்கு கப்பல்கள் வருகின்றன. இந்த வகையில் நேற்று, ஒரு குறிப்பிட்ட கப்பலில் இருந்து சரக்கு பெட்டகங்களை இறக்கும்போது, அதில் உயிருடன் உடும்பு ஒன்று பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இது குறித்து துறைமுக அதிகாரிகள் அளித்த தகவலின்படி, அங்கு சென்ற வனத்துறையினர், 40 கிலோ எடையுள்ள உடும்பை மீட்டனர். அது கிண்டியில் உள்ள வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த உடும்பு, எந்த நாட்டில் இருந்து, எப்படி வந்தது என்பது குறித்து விசாரித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
