/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எஸ்.ஆர்.எம்., இயக்குனருக்கு ஐ.நா., விருது
/
எஸ்.ஆர்.எம்., இயக்குனருக்கு ஐ.நா., விருது
ADDED : மார் 27, 2025 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, :எஸ்.ஆர்.எம்., பல்கலையின் விளையாட்டு துறை இயக்குனர் ஆர்.மோகன கிருஷ்ணணனுக்கு, ஐ.நா., சபையின் கவுரவ விருது வழங்கப்பட்டது.
எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விளையாட்டு துறை இயக்குனராக ஆர்.மோகனகிருஷ்ணன் உள்ளார். இவருக்கு, ஐ.நா., சபையின் எஸ்.டி.ஜி., விருது கிடைத்துள்ளது.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள ஐ.நா., மாநாட்டு மையத்தில், கடந்த 24ம் தேதி, இந்த விருது வழங்கப்பட்டது.
அமைதி, கல்வி மற்றும் விளையாட்டு வழியாக, மாணவர்களை ஊக்குவிப்பதில் முக்கியமான பங்கு வகித்த தனி நபர்கள் மற்றும் அமைப்புகளை கவுரவித்து, இந்த விருது வழங்கப்படுகிறது.
***