/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அறிவிக்கப்படாத மின் வெட்டு ஜெ.ஜெ.நகர் வாசிகள் அவதி
/
அறிவிக்கப்படாத மின் வெட்டு ஜெ.ஜெ.நகர் வாசிகள் அவதி
அறிவிக்கப்படாத மின் வெட்டு ஜெ.ஜெ.நகர் வாசிகள் அவதி
அறிவிக்கப்படாத மின் வெட்டு ஜெ.ஜெ.நகர் வாசிகள் அவதி
ADDED : மே 20, 2025 01:35 AM
ஆவடி, மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக, பட்டாபிராம், சேக்காடு, அய்யப்பன் நகர், ஸ்ரீதேவி நகர், கண்ணப்பாளையம், கோபாலபுரம், வி.ஜி.என்., நகர் உள்ளிட்ட பகுதிகளில், காலை 9:00 மணி முதல் 2:00 மணி வரை, மின் வினியோகம் நிறுத்தப்படும் என, நேற்று முன்தினம் தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
அதில், சோராஞ்சேரி ஊராட்சி பகுதிகள் குறிப்பிடப்படவில்லை.
பட்டாபிராம் அடுத்த சோராஞ்சேரி ஊராட்சி பகுதிகள், பாரிவாக்கம் மின் வாரியத்திற்கு உட்பட்ட பகுதியாகும். ஆனால், கடந்த சில மாதங்களாக பட்டாபிராம், சேக்காடு துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை சோராஞ்சேரி சுற்றுவட்டார பகுதிக்கு உட்பட்ட ஜெ.ஜெ.நகரில் 500க்கும் வீடுகளில், திடீரென மின் வெட்டு ஏற்பட்டது.
அதேநேரம், காலை முதல் ஆவடி சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என, பொதுமக்கள் கருதினர்.
நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால், சம்பந்தப்பட்ட மின் வாரிய ஊழியர்களிடம் கேட்ட போது, 'இன்று ஒருநாள் மின்வெட்டு' என்று தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பகுதிவாசிகள், முன்னறிவிப்பு இன்றி, எப்படி மின்சாரம் துண்டிக்கலாம் எனக்கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள், இணைப்பை மாற்றி கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது' எனக் கூறினர்.