/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அறிவிக்கப்படாத மின் வெட்டு மேடவாக்கத்தில் மக்கள் அவதி
/
அறிவிக்கப்படாத மின் வெட்டு மேடவாக்கத்தில் மக்கள் அவதி
அறிவிக்கப்படாத மின் வெட்டு மேடவாக்கத்தில் மக்கள் அவதி
அறிவிக்கப்படாத மின் வெட்டு மேடவாக்கத்தில் மக்கள் அவதி
ADDED : ஜூன் 22, 2025 12:22 AM

மேடவாக்கம், மேடவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட விஜயநகரத்தில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, அடிக்கடி அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்படுகிரது. இதனால், கொசு தொல்லை, புழக்கத்தால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதிவாசி மணிபாபு கூறியதாவது:
எங்கள் பகுதியில், இரவு நேரங்களில் அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டு, மூன்று மணி நேரம் கழித்தே மின்சாரம் வருவதால், முதியோர், குழந்தைகள் துாக்கமின்றி தவிக்கின்றனர்.
பள்ளி, கல்லுாரி திறந்துள்ள நிலையில், அடிக்கடி நடக்கும் அறிவிக்கப்படாத மின்வெட்டால், மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மின் வாரிய ஊழியர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. வேங்கைவாசல் மின் வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டால், அவர்களும் மொபைல் போன் அழைப்பை ஏற்பதில்லை. மின் வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்றால், பணியாளர்கள் யாருமின்றி பூட்டிக்கிடக்கிறது.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு ஏற்பட்ட மின்தடை, மூன்று மணி நேரத்திற்கு பிறகு, இரவு 2:00 மணிக்கே வந்தது. எனவே, சந்தோஷபுரத்தில் அமைந்துள்ள வேங்கைவாசல் மின் வாரிய அலுவலகத்தில், கூடுதல் பணியாளர்களை நியமித்து, மின்சார வினியோகத்தில் ஏற்படும் சிக்கலை சரிசெய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.