அனுமதியற்ற கழிவுநீர் இணைப்பு: திருமுல்லைவாயிலில் துண்டிப்பு
அனுமதியற்ற கழிவுநீர் இணைப்பு: திருமுல்லைவாயிலில் துண்டிப்பு
UPDATED : அக் 07, 2026 07:00 PM
ADDED : அக் 07, 2026 05:46 PM

அ நிறம் | அளவு
ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட அராபத், விளிஞ்சியம்பாக்கம், கோவிந்தன் தாங்கல், கோவில் பதாகை உட்பட ஏழு ஏரிகளில், புதன்கிழமைதோறும் ஆய்வு நடத்த கமிஷனர் சரண்யா உத்தரவிட்டுள்ளார். ஏரிகளில் கழிவுநீர் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தால், உடனடியாக துண்டிக்கவும் கூறியுள்ளார்.
அதன்படி, திருமுல்லைவாயில், மணிகண்டபுரம் முதல், இரண்டாவது தெருவில் உள்ள 90 வீடுகளில், அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் 30 வீடுகளில், அனுமதியின்றி தொட்டி அமைத்து, குழாய் வாயிலாக அராபத் ஏரியில் கழிவுநீரை வெளியேற்றுவது கண்டறியப்பட்டது. இந்த வீடுகளில் சட்ட விரோத இணைப்புகளை துண்டித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு 9,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
