/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதைக்கப்படாத மின் வடம் திருவொற்றியூரில் அபாயம்
/
புதைக்கப்படாத மின் வடம் திருவொற்றியூரில் அபாயம்
ADDED : செப் 19, 2024 12:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதைக்கப்படாத மின் வடம் திருவொற்றியூரில் அபாயம்
திருவொற்றியூர், சுங்கச்சாவடி - விம்கோ நகர் வரையிலான, திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் இருபுறமும், மழைநீர் வடிகால் உள்ளது. இதன் மேல்புறம், நடைபாதை உள்ளது. அதுமட்டுமல்லாமல், நடைபாதைகளில் ஆங்காங்கே மின் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள் சாலைகளில் இறங்கி நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
அதேபோல், புதை மின் வடங்கள், பல இடங்களில் புதைக்கப்படாமல், வெளியே கிடப்பதால், நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை.மழைக்காலங்களில், மின் விபத்து அபாயம் உள்ளது. எனவே, மின்வாரியம் கவனித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.சரவணன், 41, திருவொற்றியூர்.