ADDED : மே 09, 2025 01:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோடம்பாக்கம்,விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் இளையபெருமாள், 50. இவரது மகன் நந்தகிஷோர், 24.
இவர், சென்னை, கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள விடுதியில் தங்கி, ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியம் அமைப்பான 'யுனிசெப்' நிறுவனத்தில் பணி செய்து வந்தார்.
கடந்த மாதம், டிரஸ்ட்புரம் ஆறாவது தெருவில் உள்ள தன் நண்பர் செல்வராஜ் அறையில் தங்கினார். அங்கிருந்து கடந்த 30ம் தேதி வெளியே சென்ற நந்தகிஷோர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது நண்பர் செல்வராஜ், கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 1ம் தேதி புகார் அளித்தார். இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

